சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மூவயிரத்தை நெருங்கியுள்ளது. மேலும், 82 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவை தொடர்ந்து தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
ஈரானில் இந்த நோயால் நேற்று வரை 26 பேர் உயிரிழந்தனர். வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நேற்று வரை 141 ஆக உயர்ந்திருந்தது. மேலும், அந்நாட்டு துணை சுகாதார மந்திரி இராஜு, துணை அதிபர் மசூமே எப்டகர் ஆகியோருக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 593 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் வேகமாக பரவுதால் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது