அத்தியாவசியப் பொருட்களை தேடி கிராமங்களை தேடி பொருட்களை வாங்கி வரும் மக்கள்

அத்தியாவசியப் பொருட்களை தேடி கிராமங்களை தேடி பொருட்களை வாங்கி வரும் மக்கள்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


 தேனி மாவட்டத்தில் முக்கியமான பகுதிகள் பெரியகுளம், தேனி ,போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய நகர் பகுதிகளில் மொத்தம் 23 பேருக்கு வைரஸ் பாதிப்பு உள்ளாகியுள்ளது.


 குறிப்பாக பாதிக்கப்பட்ட நபர்கள் வசித்துவந்த தெருக்களில் இருந்து யாரும் வெளியே வர முடியாத அளவுக்கு தகரங்களை வைத்தும், இரும்பு தடுப்புகள் வைத்தும் , கம்பிகளை கட்டியும், முட்புதர்களை போட்டும் அடைக்கப்பட்டுள்ளன.


 முடக்கப்பட்ட நகரங்களில் மருந்துக்கடைகளை தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.


 காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.
 தேனி பெரியகுளம் பகுதிகளில் மக்களுக்கு தேவையான காய்கறி விற்பனை செய்ய நடமாடும் உழவர்சந்தை தொடங்கப்பட்டது.
 வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர் .
ஆனால் வாகனங்களில் கொண்டு வந்து காய்கறிகளை விற்பனை செய்யும் இந்த முயற்சியை மக்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது.
 ஏனெனில் ஒரு சில  காய்கறிகளை மட்டுமே வாகனங்களில் வைத்து விற்பனை செய்கின்றனர். 


 இதனால் மக்கள் பெரும்பாலும் கிராமங்களை தேடி காய்கறிகள் வாங்கி வருகின்றன..


 குறிப்பாக தேனி அருகே உள்ள அன்னஞ்சி, வடபுதுப்பட்டி, அரண்மனை புதூர், கொடுவிளார்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சென்று பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் பலர் சென்று வருகின்றனர்.


 மேலும் பெரியகுளம் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளான எண்டபுளி, வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம், லட்சுமிபுரம் காமக்காபட்டி போன்ற கிராமங்களில் பொருட்களை வாங்கி வருகின்றனர்.


 இதனால் மக்கள் பெரிதும் பாதித்து வந்து உள்ளனர்.


 மேலும் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்க கடைகள்  இல்லாமல் மக்கள் பெரிதும் பாதித்து வருகின்றனர். 


 பெரியகுளம் தேனி போன்ற பகுதிகளில் குறிப்பாக தேனி மாவட்டத்தில் முக்கிய பகுதிகளான அனைத்து ஊர்களிலும் மளிகை பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிரமங்கள் உள்ளன என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


 இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்..